அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம் 'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள் ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய
Comments
Post a Comment