Skip to main content

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் .............
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும்.

அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். இவரே இஸ்லாமிற்காக உயிர் நீத்த முதல் பெண்மணி ஆவார்.


அவர்களது மகனாரான அம்மாரை  பாலைவனச் சுடுமணலில் கிடத்தி நெஞ்சின் மீது பாறாங்கல்லை வைத்தும், நினைவிழக்கும் வரை தண்ணீரில் மூழ்கடித்தும் சித்திரவதை செய்தனர்.   ''முஹம்மதை திட்ட வேண்டும் அல்லது லாத், உஜ்ஜாவைப் புகழ வேண்டும். அப்போதுதான் உன்னை இத்தண்டனையிளிருந்து விடுவிப்போம்'' என்றும் கூறினர் .  வேதனை தாளாத அம்மார் [ரலி] அவர்கள் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார். அதற்குப் பின் நபி [ஸல்] அவர்களிடம் வந்து அழுது மன்னிப்புக் கோரினார். அப்போது அல்லாஹ் பின்வரும் வசனத்தை இறக்கியருளினான்.  [இப்னு ஹிஷாம்]


[ஆகவே,] எவரேனும் நம்பிக்கை கொண்டதன் பின்னர் , அல்லாஹ்வை [நிராகரித்தால் அவனைப் பற்றிக் கவனிக்கப்படும்] அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவனுடைய நிர்பந்தத்தின் மீதும் அவன் [இவ்வாறு] நிராகரித்தால் [அவன் மீது யாதொரு குற்றமில்லை] எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந் [து இவ்வாறு செய் ]தால்  அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனைமுண்டு.     [அல்குர் ஆன்  16..106]

அஃ ப்லஹ் அபூ ஃ புகைஹா [ரலி] அவர்கள் அப்து தார் கிளையைச் சார்ந்த  ஒருவருடைய அடிமையாக இருந்தார். இவரது இரு கால்களையும் சங்கிலியால் பிணைத்து  . ஆடைகளைக் கழற்றிவிட்டு சுடுமணலில் குப்புறக்  கிடத்தி அசையாமலிருக்க பெரும் பாறையை முதுகின் மீது வைத்து, சுய நினைவை இழக்கும் வரை அவரை அதே நிலையில் விட்டுவிடுவார்கள். இவ்வாறான கொடுமைகள் தொடர்ந்தன. ஒருமுறை அவரது கால்களைக் கயிற்றால் பிணைத்துச் சுடுமணலில் கிடத்தி கழுத்தை நெறித்தார்கள் . அவர் சுயநினைவை இழந்தவுடன் இறந்துவிட்டாரென எண்ணி விட்டுவிட்டார்கள். அப்போது அவ்வழியாக வந்த அபூபக்ர் [ரலி] அ ஃ ப்லஹை விலைக்கு வாங்கி உரிமையிட்டார்கள்.

கப்பாப் இப்னு அரத் [ரலி] அவர்கள் உம்மு அன்மார் என்ற பெண்ணின் அடிமையாகவும் கொல்லர் பணி  செய்பவராகவும் இருந்தார்கள். அவர் இஸ்லாமைத் தழுவியதை அறிந்த எஜமானி பழுக்கக் காய்ச்சப்பட்ட இரும்பால் அவர்களது தலையிலும் முதுகிலும் சூடிட்டு  ''முஹம்மதின் மார்க்கத்தை விட்டுவிடு '' என்று கூறுவாள். ஆனால் இவ்வாறான வேதனைகளால் அவர்களது ஈமானும்  மன உறுதியுமே அதிகரித்தது. உம்மு அன்மார் மட்டுமின்றி ஏனைய  நிராகரிப்பவர்களும் அவரது முடியைப் பிடித்திழுப்பார்கள்.. கழுத்தை நெறிப்பார்கள் . நெருப்புக் கங்குகலின் மீது அவரைப் படுக்க வைப்பார்கள். அந்த நெருப்பு அவரது உடலைப் பொசுக்க , அப்போது இடுப்பிலிருந்து கொழுப்பு உருகி ஓடி , நெருப்பை அணைத்து விடும்.

ரோம் நாட்டைச் சேர்ந்த அடிமையான ஜின்னீரா ]ரலி] என்ற பெண்மணி இஸ்லாமை ஏற்றதற்காக பலவிதமான கொடுமைக்கு  ஆளானார். அப்போது கண்ணில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக பார்வையை இழந்தார்.  ''இவரது கண்ணை லாத் , உஜ்ஜா பறித்துவிட்டன'' என்று நிராகரிப்பவர்கள்  கூறினர் .  அதற்கு ஜின்னீரா  ,  ''நிச்சயமாக இல்லை! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இது அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஏற்பட்டது. அவன் நாடினால் எனக்கு நிவாரணமளிப்பான் '' என்று கூறினார் . மறுநாள் அவர்களது பார்வையை அல்லாஹ் சரிசெய்தான் . அதைக் கண்ட குறைஷியர்கள்  ''இது முஹம்மத்தின் சூனியத்தில் ஒன்று '' என்று கூறினர் .

இன்னும் இதுப் போன்ற நிறைய சம்பவங்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.........................
அல்லாஹ் நமக்கும் ஈமான் உறுதியையும் , இறையச்சத்தையும் கொடுப்பானாக.........ஆமீன்........
அல்லாஹ் மிக அறிந்தவன்

  

Comments

Popular posts from this blog

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக