Skip to main content

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்......
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்..........
நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன.


அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

ஹிஜ்ரி 10, ரமலான் மாதத்தில் நபி [ஸல்] இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். பொதுவாக 10 நாட்கள் இஃதிகாஃப் இருப்பதுதான் நபி [ஸல்] அவர்களின் வழக்கமாக இருந்தது. இம்முறை வானவர் ஜிப்ரயீல் நபியவர்களிடம் வந்து இருமுறை குர்ஆனைப் பரிமாறிக் கொண்டார்கள். இறுதி ஹஜ்ஜில்  'இந்த ஆண்டிற்குப் பின் இந்த இடத்தில் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம்' என்று நபி [ஸல்] கூறியிருந்தார்கள். ஜம்ரத்துல் அகபாவில்  நபி [ஸல்] நிற்கும்போது  ''உங்களது வணக்க வழிபாடுகளை, ஹஜ் கடமைகளை என்னிடம் கற்றுக் கொள்ளுங்கள். இந்த ஆண்டிற்குப் பிறகு நான் ஹஜ்ஜூக்கு வர முடியாமல் போகலாம்'' என்றும் கூறியிருந்தார்கள். ஹஜ் பிறை  12ல் சூரத்துன் நஸ்ர்  நபி [ஸல்] அவர்களுக்கு அருளப்பட்டது. இவற்றிலிருந்து நபி [ஸல்] இவ்வுலகை விட்டு விடைபெறப் போகிறார்கள். அவர்களது மரணச் செய்தி அவர்களுக்கு வந்துவிட்டது என்பதைத் தெளிவாக உணரலாம்.

துல்ஹஜ் முடிந்து முஹர்ரமும் முடிந்தது. சஃபர் மாதம் பிறந்தது. ஹிஜ்ரி 11, சஃபர் மாத தொடக்கத்தில் நபி [ஸல்] உஹூதுக்குச் சென்றார்கள். அங்கு ஷஹீதானவர்களுக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சித் தொழுதார்கள். இருப்பவர்களுக்கும் இறந்தோருக்கும் விடை கூறுவது போல் நபி [ஸல்] அவர்களின் இச்செயல் அமைந்தது. பின்பு தங்களது பள்ளிக்கு வந்து மிம்பரில் ஏறி  ''நான் உங்களுக்கு முன் செல்கிறேன். நான் உங்களுக்கு சாட்சியாளன் . அல்லாஹ்வின் மீது சத்தியமாக ! நான் தற்போது எனது நீர் தடாகத்தைப் பார்க்கிறேன். எனக்கு பூமியிலுள்ள பொக்கிஷங்களின் சாவிகள் கொடுக்கப்பட்டன. அல்லாஹ்வின் மீது ஆணையாக! எனக்கு பின் நீங்கள் இணைவைப்பவர்களாக மாறிவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை. இவ்வுலகத்திர்காக நீங்கள் சண்டையிட்டுக் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன்'' என்றார்கள். 
ஸஹீஹுல் புகாரி ]

ஒரு நாள் நடுநிசியில் பகீ ஃ மண்ணறைக்கு சென்று அங்கு அடக்கம் செய்யப்பட்டவர்களுக்காக  பாவ மன்னிப்புத் தேடினார்கள். மேலும்  '' மண்ணறைவாசிகளே! மக்கள் இருக்கும் நிலையைவிட உங்களது நிலை உங்களுக்கு இன்பம் பயக்கட்டும். இருள் சூழ்ந்த இரவுப் பகுதிகளைப் போன்று குழப்பங்கள் வரவிருக்கின்றன. ஒன்றன்பின் ஒன்றாக தொடராக வந்து கொண்டிருக்கும். பிந்தியது முந்தையவிட மோசமானதாக இருக்கும்'' எனக் கூறிவிட்டு ''நிச்சயமாக நாமும் உங்களிடம் வந்து சேருவோம்'' என்ற நற்செய்தியையும் அவர்களுக்குக் கூறினார்கள்.

நோயின் ஆரம்பம் 
ஹிஜ்ரி 11, சஃபர் மாதம் , திங்கள்கிழமை பிறை 28 அல்லது 29  ஜனாஸா ஒன்றில் கலந்து கொள்ள பகீ ஃ  சென்றார்கள். நல்லடக்கம் செய்துவிட்டு திரும்பும் வழியில் நபி [ஸல்] அவர்களுக்குக் கடும் தலைவலி ஏற்பட்டது. உடல் சூடு அதிகமானது. தலைமேல் கட்டியிருந்த துணிக்கு மேல் புறத்திலும் அனலை  உடனிருப்போர் உணர்ந்தனர். பதினொரு நாட்கள் நோய்வாய்ப்பட்ட நிலையிலேயே மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். 13 அல்லது 14 நாட்கள் கடினமான நோயில் கழித்தார்கள்.

இறுதி வாரம் 
நபி [ஸல்] அவர்களுக்கு நோய் கடுமையாகவே  ''நாளை நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன் என துணைவியரிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். நபி [ஸல்] அவர்களின் துணைவியர்  நபி [ஸல்] விரும்பிய  வீட்டில் தங்குவதற்கு அனுமதித்தனர். ஒருபுறம் ஃ பழல் இப்னு அப்பாஸ் [ரலி] , மறுபுறம் அலீ இப்னு அபூதாலிப் [ரலி] தாங்களாக , கால்கள் தரையில் உரசிக் கொடு போட்ட நிலையில் ஆயிஷா [ரலி] வீட்டிருக்குச் சென்றார்கள். அவர்களின் தலை துணியால் கட்டப்பட்டிருந்தது. ஆயிஷா [ரலி] வீட்டிலேயே தங்களது வாழ்வின் இறுதி வாரத்தை நபி [ஸல்] கழித்தார்கள். அன்னை ஆயிஷா [ரலி] சூரா ஃ பலக் , நாஸ்  மற்றும் நபி [ஸல்] அவர்களிடம் தான் கற்ற துஆக்களை ஓதி ஊதி வந்தார்கள். பரக்கத்தை நாடி நபி [ஸல்] அவர்களின் கரத்தாலேயே அவர்களைத் தடவி விட்டார்கள்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்.................  
  

Comments

Popular posts from this blog

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக