Skip to main content

Posts

Showing posts from February, 2015

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக

நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள்

நபி(ஸல்) அவர்களின்) சிறப்புகள் 3489.  ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார் "மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும், ஓர் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு, நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களைப் பல சமூகங்களாகவும் குலங்களாகவும் ஆக்கினோம்' (திருக்குர்ஆன் 49:13) என்னும் இறைவசனத்தில் இடம் பெற்றுள்ள 'ஷுவூப் சமூகங்கள்' என்னும் சொல் பெரிய இனங்களையும் 'கபாயில் - குலங்கள்' என்னும் சொல், அந்த இனங்களில் உள்ள உட் பிரிவுகளையும் குறிக்கும்" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். Volume :4 Book :61 3490.  அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார் "இறைத்தூதர் அவர்களே! மக்களில் கண்ணியத்திற்குரியவர் யார்?' என்று (நபி(ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அதற்கு நபியவர்கள், 'அவர்களில் இறையச்சமுடையவரே" என்று பதிலளித்தார்கள். மக்கள், 'நாங்கள் இதைப் பற்றி உங்களிடம் கேட்கவில்லை" என்றனர். உடனே, நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால் அல்லாஹ்வின் தூதரான யூசுஃப் அவர்கள் தாம் (மக்களில் கண்ணியத்திற்குரியவர்கள்)" என்று கூறினார்கள். V