Skip to main content

Posts

Showing posts from June, 2014

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

துன்புறுத்துதல் ஈமான் கொண்டவர்களை !

அல்லாஹ்வின் திருபெயரால் ........ எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! ஈமான் கொண்டார்கள் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள். எந்தளவுக்கு என்றால் ஈமான் கொண்டவர்களின் உயிர்கள் போகும் அளவுக்கு அவர்கள் பல வேதனைகளைச் சுவைத்தார்கள் . ஆனால் அவர்களின் உயிர்தான் போனது , ஈமான் உறுதியாக இருந்தது.