Skip to main content

துன்புறுத்துதல் ஈமான் கொண்டவர்களை !

அல்லாஹ்வின் திருபெயரால் ........
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!


ஈமான் கொண்டார்கள் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள். எந்தளவுக்கு என்றால் ஈமான் கொண்டவர்களின் உயிர்கள் போகும் அளவுக்கு அவர்கள் பல வேதனைகளைச் சுவைத்தார்கள் . ஆனால் அவர்களின் உயிர்தான் போனது , ஈமான் உறுதியாக இருந்தது.



நபி [ஸல்] அவர்களின் பகிரங்க அழைப்பைத் தொடர்ந்து பல மாதங்கள் எதிரிகள் மேற்கொண்ட தடுப்பு முயற்சிகள் அனைத்தும் தோல்வியைத் தழுவின . தாங்கள் கையாண்ட வழிமுறைகளால் எவ்வித பயனுமில்லை என்று அவர்களின் அறிவுக்கு மெதுவாக உரைத்த  அடுத்த  கட்ட   நடவடிக்கையாக மாற்று வழியைக் கையாண்டனர் . அதாவது, ஒவ்வொரு சமூகத்தலைவரும் எஜமானரும் தன்னுடைய ஆளுமையின் கீழுள்ளவர்கள், அடிமைகள்- இவர்களின் யாராவது இஸ்லாமைத் தழுவினால் அவர்களைத் துன்புறுத்த வேண்டும். அவர்களுக்கு இன்னல்கள் விளைவிக்க வேண்டும் என முடிவு செய்தனர்.

தலைவர்களுடன் அவர்களது எடுபிடிகளும் சேர்ந்துகொண்டு முஸ்லிம்களை வாட்டி வதைத்தனர். குறிப்பாக, சாதாரண எளிய முஸ்லிம்களுக்கு அவர்கள் தந்த நோவினைகளைக் கேட்கும்போதே உள்ளம் கசிந்துருகும் . அவற்றை சொல்லி மாளாது .

செல்வமும் செல்வாக்குமுள்ள ஒருவர் இஸ்லாமைத் தழுவினால் அவரிடம் அபூஜஹ்ல் நேரே சென்று  '' உன் செல்வத்தையும் செல்வாக்கையும் ஒன்றுமில்லாமளாக்கி விடுவேன்' என்று மிரட்டுவான். அவர் கொஞ்சம் பலமில்லாதவராக இருந்தால் அடித்துத் துபுருத்துவான்.
                                                          [இப்னு ஹிஷாம் ]

உஸ்மான் [ரலி] அவர்களது தந்தையின் சகோதரர் அப்பாவி முஸ்லிம்களை பேரீத்தங்ககீற்றுப் பாயில் சுருட்டி வைத்து அதற்குக் கீழே புகை மூட்டி மூச்சு திணறடிப்பர் .                          [ரஹ்மத்துல்லில் ஆலமீன் ]

தனது மகன் முஸ்லிமாகி விட்டதை அறிந்த முஸ் அப் இப்னு உமைர் [ரலி] அவர்களின் தாயார் அவருக்கு உணவு, தண்ணீர் கொடுக்காமல் வீட்டிலிருந்து விரட்டிவிட்டார். மிக ஆடம்பரமாக வாழ்ந்து வந்த அவர் பெரும் துன்பத்தை  அனுபவித்தார் . பசி பட்டினி என்ற வறண்ட வாழ்க்கையினால் அவர்களது மேனியின் தோல் சுருங்க ஆரம்பித்தது .         [அசதுல் காபா ]

ஸூ ஹைப் இப்னு ஸினான் [ரலி] நினைவிழக்கும் வரை கடுமையாக   தாக்கப்படுவார்.

பிலால்  [ரலி] அவர்கள் உமய்யா இப்னு கல ஃ புடைய அடிமையாக இருந்தார்கள். உமையா அவர்களது கழுத்தில் கயிற்றைக் கட்டி சிறுவர்களிடம் கொடுப்பான். சிறுவர்கள் அவரை மக்காவின் முரடான மலைப் பாதைகளில் இழுத்துச் செல்வார்கள். கயிற்றின் அடையாளம் அவர்களது கழுத்தில் பதிந்துவிடும் . அவர்கள்  'அஹத்  'அஹத் ! என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். சில வேளைகளில் உமையா பிலாலை மிக இறுக்கமாகக் கட்டி தடியால் கடுமையாகத்  தாக்குவான். பிறகு சூரிய வெப்பத்திலும் போடுவான். உணவளிக்காமல் பசியால் துடிக்க வைப்பான். சுட்டெரிக்கும் சூரிய வெப்பத்தில் பாலைவன  மணலில் கிடத்தி அவர்களது நெஞ்சின் மீது பாறாங்கல்லைத் தூக்கி  வைப்பான். அப்போது பிலாலை நோக்கி,  ''அல்லாஹ்வின் மீதாணையாக ! நீ சாக வேண்டும். அல்லது முஹம்மதின் மார்க்கத்தை நிராகரித்து  லாத் உஜ்ஜாவை வணங்க வேண்டும். அதுவரை நீ இப்படியேதான் இருப்பாய். உன்னை விடவே மாட்டேன்.'' என்பான் . அதற்கு பிலால் [ரலி] அஹத்! என்று சொல்லிக் கொண்டே, இந்த  'அஹத் என்ற வார்த்தையைவிட உனக்கு ஆவேசத்தை உண்டு பண்ணும் வேறொரு வார்த்தை எனக்குத் தெரிந்தால்  நான் அதையே கூறுவேன்'' என்பார்கள்.

ஒரு நாள் பிலால் [ரலி] சித்திரவதைக்குள்ளாகி இருக்கும்போது அவர்களைக் கடந்து  சென்ற அபூபக்ர் [ரலி] அவர்கள் ஒரு ஹபஷி அடிமையை கிரயமாகக் கொடுத்து பிலால் [ரலி] அவர்களை வாங்கி உரிமை விட்டார்கள். சிலர்  ''ஐந்து அல்லது எழு ஊகிய வெள்ளிக்குப் பகரமாக வாங்கி உரிமை விட்டார்கள்'' என்று கூறுகின்றனர்.                  [இப்னு ஹிஷாம்]

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும்.............. 

Comments

Popular posts from this blog

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக