Skip to main content

அழைப்புப் பணியில் இடையூறுகள்

அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அழைப்புப் பணியும்போது , அவர்கள் பட்ட கஷ்ட்டங்கள் , சிரமங்கள் சொல்லிமாளது . எழுத்தால் அவைகளை எழுத முடியாது. வார்த்தைகளால் சொல்ல முடியாது. அண்ணலார் பட்ட கஷ்ட்டங்கள் அதிகம் அதிகம் , மிக பெரிய தியாகம் செய்தார்கள் . அழைப்புப் பணியும்போது அண்ணலார் பொறுமையும், சகிப்புத்தன்மையும் , நிதானமும் , அழகிய முறையில் த ஃ வா பணிச் செய்தார்கள். பல தொல்லைகள்ளும் , சிரமங்களும் இருந்தன. ஆனால் , இன்று சில மக்கள்கள் மார்க்கத்தின் பெயரால் நிறைய மூடபழக்கங்கள் , புது புது நூதன காரியங்கள் செய்து வருகிறார்கள். அண்ணல் நபி [ஸல்] அவர்கள் காட்டிய வழிமுறைகளை விட்டுவிட்டு , மாற்றுமத கலாச்சாரத்தில் முழ்கி இருக்கிறார்கள் . சுன்னத்தான காரியத்தை செய்யாமல் , பித் ஆ செய்துக் கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக சில பெண்கள் மார்க்கத்துக்கு மாற்றமான காரியங்களை செய்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் . சமீபத்தில் பார்த்தது facebook வழியாக , சில முஸ்லிம் பெண்கள் பர்தா போட்டுக் கொண்டு கோயிகளுக்கு போவதையும் , அங்கு அர்ச்சனை செய்யும் பூசாரி அருகில் நிற்ப்பதையும் பார்க்கிறோம் . இவர்கள் என்ன சொல்வது ? இவர்கள் முஸ்லிம்களா? அல்லாஹ் மிக அறிந்தவன் அவர்களின் உள்ளத்தை . இது என் சொந்த கருத்துக்கள் ! இதில் தவறுகள் இருக்கலாம் , நீங்கள் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். நீங்கள் தவறுகளை சுட்டியும் காட்டலாம் . அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வான்....


அழைப்புப் பணியில் இடையூறுகள் ..

ஹஜ் காலம் முடிந்தது. இறை அழைப்புப் பணியை அதன் ஆரம்ப நிலையிலேயே கருவருத்திட வேண்டுமென குறைஷியர்கள் பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டனர். அவற்றின் சுர்க்கம் பின்வருமாறு.

பரிகசித்தல், இழிவுபடுத்துதல் , பொய்ப்பித்தல் , எள்ளி நகையாடுதல்..

இதுபோன்ற இழிசெயல்களால் முஸ்லிம்களை மனதளவில் பலவீனப்படுத்த எண்ணினர் . அற்பமான வசைச்சொற்களால் நபி [ஸல்] அவர்களை ஏசினர். சில வேளைகளில் பைத்தியக்காரர் என்றனர் .

[நமது நபியாகிய உங்களை நோக்கி] ''வேதம் அருளப்பட்டதாகக் கூறும் நீங்கள் நிச்சயமாக பைத்தியக்கரார்தான்'' என்று கூறுகின்றனர். [அல்குர் ஆன் 15..6]

சில வேளைகளில் நபி [ஸல்] அவர்களை 'சூனியக்காரர்' என்றும்  'பொய்யர்' என்றும் கூறினர் .

[அவர்களுக்கு] அச்சமூட்டி எச்சரிக்கக்கூடிய ஒரு தூதர், [ஆகிய நீங்கள்] அவர்களி [ன் இனத்தி ] லிருந்து அவர்களிடம் வந்ததைப் பற்றி அவர்கள் ஆச்சிரியப்பட்டு, ''இவர் மிகப் பொய் சொல்லும் சூனியக்காரர்தான்'' என்று [உங்களைப் பற்றி] நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர்.  [அல்குர் ஆன் 38..4 ]

வஞ்சகத்தனைத்தையும் சுட்டெரிக்கும் பார்வைகளையும் நபி [ஸல்] அவர்கள் மீது வீசினர் .

[நபியே] நிராகரிப்பவர்கள் நல்லுபதேசத்தைக் கேட்கும்போதெல்லாம், அவர்கள் தங்களுடைய பார்வைகளைக் கொண்டே உங்களை வீழ்த்தி விடுபவர்களைப் போல் [கோபத்துடன் விரைக்க விரைக்கப் ] பார்க்கின்றனர். அன்றி [உங்களைப் பற்றி] நிச்சயமாக , அவர் பைத்தியக்காரர்தான் என்றும் கூறுகின்றனர்.                     [அல்குர் ஆன் 68..51]

நபி [ஸல்] அவர்கள் தங்களது எளிய தோழர்களுடன் அமர்ந்திருக்கும்போது அவர்களை கேலி செய்வார்கள்.

[நபியே] இவ்வாறே அவர்களில் சிலரை சிலரைக் கொண்டு நாம் சோதித்ததில் ''எங்களை விட்டு [ஏழைகளாகிய] இவர்கள் மீதா அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான்?'' என்று [பணக்காரர்கள்] கூற முற்பட்டனர். நன்றி செலுத்துபவர்களை அல்லாஹ் மிக அறிந்தவனல்லவா?    அல்குர் ஆன் ..6..53]

இன்ஷாஅல்லாஹ் இன்னும் தொடரும் ..............

இவைகள் நமக்கு ஒரு பாடமாகவும் , படிப்பினையாகவும் இருக்கும் . நம் வாழ்க்கையில் ஒரு சிறு  மாற்றம் வர வேண்டும் . அல்லாஹ் சொன்னதும், அல்லாஹ்வின் தூதர்  சொன்னதும் , அவர்கள் செய்துக் காட்டியதும் தான் மார்க்கம் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும்  அந்த பாக்கியத்தைத் தருவானாக! ஆமீன்.........

அல்லாஹ் மிக அறிந்தவன்.

Comments

Popular posts from this blog

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக