Skip to main content

உயர்ந்தோனை நோக்கி....


அல்லாஹ்வின் திருபெயரால் ...
எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக!

அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கை பற்றி ரொம்ப சுர்க்கமான முறையில் , அண்ணலாரின் அற்புத வாழ்க்கை , வழிமுறைகள் அழகான நெறிமுறைகள் . அவர்களின் நற்பண்புகள் , நற்குணங்கள் . அண்ணல் நபி [ஸல்] அவர்களைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ...

இன்ஷாஅல்லாஹ் இந்த சிறிய கட்டுரை உங்களுக்கும் , எங்களுக்கும் ஒரு நல்ல மாற்றத்தை நம் வாழ்க்கையில் ஏற்படுத்தும் மட்டுமின்றி , அண்ணல் நபி [ஸல்] அவர்கள் மீது அன்பும் , பாசமும் , நேசமும் , மதிப்பும் , மரியாதையும்  அவர்களின் வாழ்க்கை முறைகளை பின்பற்றி நடக்க ஆசையும்,  ஆர்வமும் நமக்கு அல்லாஹ் ஏற்படுத்தித் தருவானாக! அல்லாஹ்வின் கிருபையும் , உதவியும் கொண்டு முடிந்தளவு இங்கே உங்களுக்கு சில விடயங்களை தருகிறேன். 

உயர்ந்தோன் அல்லாஹ் கூறுகிறான்..

''நிச்சயமாக நீங்கள் நற்குணமுடையவராகவே இருக்கின்றீர்கள்.''

நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கை வரலாறு ' என்பது மனித சமுதாயத்திற்காக அவர்கள் கொண்டு வந்த இறைத்தூதைக் குறிக்கும் சொல்லாகும். தான் கொண்டு வந்த இறைத்தூதை தங்களின் சொல், செயல், வழிகாட்டல், ஒழுக்க மாண்புகள் ஆகியவற்றின் மூலம் மனித குலத்திற்கு எடுத்திரைத்தார்கள் . அந்த இறைத்தூதுத்துவத்தால் மனித வாழ்வின் அளவுகோல்களை முற்றிலுமாக மாற்றினார்கள். தீமைகளைக் களைந்து நன்மைகளை போதித்தார்கள். இருளைவிட்டு மக்களை அகற்றி ஒளியை நோக்கி அழைத்து வந்தார்கள் . படைப்பினங்களை வணங்குவதிலிருந்து மனிதனை முழுமையாக விடுவித்து , படைப்பாளனாகிய ஒரே இறைவனை வணங்கும்படி செய்தார்கள். சுருங்கக்கூறின் , இவ்வுலகில் நெறி தவறி வாழ்ந்த மனிதனின் வாழ்க்கைப் பாதையை மாற்றி செம்மையான அழகிய பாதையில் அவனை வாழச்செய்தார்கள் .

நமது இக்கருத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமாயின் முஹம்மது [ஸல்] அவர்கள் தூதராக அனுப்பபடுவதற்கு முன் இருந்த நிலைமைகளையும், அவர்கள் தூதராக அனுப்பப்பட்ட பின் ஏற்பட்ட மாற்றங்களையும் முன் நிறுத்தி பார்ப்பது அவசியம் .

இதனால் நபி [ஸல்] அவர்கள் இஸ்லாமின் பக்கம் மக்களை அழைப்பதற்கு முன்பிருந்த அரபிய சமுதாயங்கள், அவர்களது கலாச்சாரங்கள்,, மேலும் அக்காலத்தில் இருந்த  சிற்றரசர்கள் பேரரசர்கள், சமுதாய அமைப்புகள், அவர்களது மத  நம்பிக்கைகள், சமூக பழக்க வழக்கங்கள், சடங்குகள் மற்றும் அவர்களது அரசியல், பொருளியல் ஆகியவற்றை குறித்து சில பிரிவுகள் சுர்க்கமாக இருக்கிறது. ஆனால் அது நமக்கு ஒரு பெரிய நீண்ட வரலாறாக இருக்கிறது. ஆகையால் , அல்லாஹ்வின் தூதரைப் பற்றி சுர்க்கமான முறையில்  , அழகான முறையிலும் தெளிவாக இன்ஷாஅல்லாஹ் பார்ப்போம்......

அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்க்கையில் எப்படி நடந்துக் கொண்டார்கள்  , அரசியல், ஆன்மீகம் , குடும்பத்தாரிடம் , உறவினர்களிடம் , மக்களிடம்  இன்னும் பல விஷயங்களில் அழகிய முறையில் உலகத்துக்கு முன்மாதரியாக  வாழ்ந்துக் காட்டிய அற்புதமான வாழ்க்கை .

நபித்துவ நிழலில் ..

நபி [ஸல்] அவர்களுக்கு நாற்பது வயது நெருங்கியது . அவர்களது ஆழிய சிந்தனை, தனிமையை விரும்பியது . சத்துமாவையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு  மக்காவிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள நூற் மலையின் ஹிரா குகைக்குச் செல்வார்கள்  .அக்குகை நான்கு முழ நீளமும் ஒன்றே முக்கால் முழ அகலமும்  கொண்டது . ரமலான் மாதத்தில் அங்கு தங்கி வணக்க  வழிபாடுகளிலும், இப்புவியையும் அதைத் தாண்டிய பிரபஞ்சத்தையும் இயக்கம் அபார சக்தியைப்பப்ற்றி  சிந்திப்பதிலும் ஈடுபடுவார்கள். சமுதாயம் கொண்டிருந்த  இணைவைக்கும் இழிவான கொள்கையையும் பலவீனமான அதன் கற்பனைகளையும்  அவர்கள் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அதே நேரத்தில்  மனதிருப்தியுடன் வாழ்க்கையைத் தொடர தெளிவான, நடுநிலையான வாழ்க்கைப் பாதையும் அவர்களுக்கு முன் இருக்கவில்லை.

தனிமையின் மீதான அவர்களது விருப்பம் அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொல்லலாம். நபி [ஸல்] அவர்கள் இதற்கு முன் உலக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார்கள்,, வியாபாரம் செய்து வந்தார்கள். இப்போது அவை அனைத்தையும் விட்டு தனிமையை நாடுகிறார்கள். ஏனெனில் மாபெரும் பொறுப்பைச் சுமக்க அவர்கள் தயாராக வேண்டும்,, உலக வரலாற்றை மாற்றி மக்களுக்கு நெரிய  பாதையைக் காட்ட ஆயத்தமாக வேண்டும். இவ்வாறு நபித்துவம் வழங்குவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தனிமையின் மீதான விருப்பத்தை அல்லாஹ்  அவர்களுக்கு ஏற்படுத்தினான். ஆக மாதத்தின் பெரும் பகுதியை  நபி [ஸல்] அவர்கள் தனிமையில் கழித்து  வந்தார்கள். தனிமையை விசாலமான மன அமைதியுடன் களித்தது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்தை இயக்கி வரும் மறைபொருள் பற்றி ஆழமாக சிந்தித்தார்கள். ஆம்! அல்லாஹ்வின் நாட்டப்படி அம்மறைப்பொருள் தொடர்ப்பு கொள்ள இதோ நேரம்  நெருங்கிவிட்டது.

[நபியே! அனைத்தையும்] படைத்த உங்களது இறைவனின் பெயரால் [எனது கட்டளைகள் அடங்கிய குர்ஆனை ] நீங்கள் ஓதுவீராக! அவனே மனிதனை கருவிலிருந்து படைக்கின்றான். [நபியே! பின்னும்] நீங்கள் ஓதுங்கள்! உங்களது இறைவன்தான் மகா பெரும்  கொடையாளி!

முந்தியவர்கள் ..

நபி [ஸல்] அவர்கள் ஆரம்பமாகக் குடும்பத்தார் மற்றும் நண்பர்களில் தனது நம்பிக்கைக்குரியவர்களுக்கு இஸ்லாமை அறிமுகப்படுத்தினார்கள். உண்மையை நேசிப்பவர் நல்லவர்  என தான் எண்ணியவர்களுக்கும் ஏகத்துவ அழைப்பு விடுத்தார்கள்.

''நீங்கள் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்யுங்கள்.''                                                                 [அல்குர் ஆன் 26..214]

நாமும் ஒரு நல்ல விடயத்தை பிறருக்கு சொல்லும்போது , முதலில் நம் குடும்பத்தாரிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும்  . பிறகு நெருங்கிய உறவினர்கள்  இப்படி ஆக நாம் செய்ய வேண்டும் . இதுதான் அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வழிமுறை ஆகும்.

இன்ஷாஅல்லாஹ் அடுத்த இதழில் ஒரு முக்கியமான விடயத்தைப் பார்க்கலாம்...
மனிதனுக்கு பொறுமை , சகிப்புத்தன்மை நல்ல சிந்தனை இவைகள் ரொம்ப ரொம்ப அவசியம் அழைப்புப் பணி செய்வதற்கு. அடுத்த இதழில்.......
   

Comments

Popular posts from this blog

ஈமான் கொண்டோம் என்பதற்காக துன்புறுத்தப்பட்டார்கள்

அல்லாஹ்வின் திருபெயரால் ............. எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! அண்ணல் நபி [ஸல்] அவர்களின் வாழ்வில் நமக்கு நிறைய பாடங்களும், படிப்பினைகளும் இருக்கின்றன. அண்ணல் நபி [ஸல்] அவர்களை பின்பற்றுவதினால் தான் வெற்றி இருக்கு என்பதை நாம் உணர வேண்டும். அம்மார் இப்னு யாஸிர் [ரலி] , அவர்களது தகப்பனார் யாஸிர் , தாயார் ஸூமைய்யா ஆகிய மூவரும் மக்ஜூம் கிளையைச் சேர்ந்த அபூ ஹூதைஃபா இப்னு முகீரா என்பவனின் அடிமைகளாக இருந்தார்கள். மூவரும் இஸ்லாமைத் தழுவினர் .இம்மூவரையும் அபூஜஹ்ல் தலைமையில் ஒரு கூட்டம்  'அப்தஹ் ' என்ற இடத்துக்கு அழைத்துச் சென்று மதிய வேளையில் சுடுமணலில் கிடத்தி கடுமையாக சித்திரவதை செய்தனர் . இதனைக் கண்ட நபி [ஸல்] அவர்கள்  ''யாஸிரின் குடும்பத்தாரே! பொறுமையை மேற்கொள்ளுங்கள் . உங்களுக்கு சொர்க்கம் வாக்களிக்கப்பட்டுள்ளது'' என ஆறுதல் கூறினார்கள். நிராகரிப்பவகர்களின் வேதனையாலேயே யாஸிர் [ரலி] இறந்துவிட்டார்கள். வயது முதிர்ந்த இயலாதவராக இருந்த அம்மாரின் தாயாரான சுமைய்யா பின்த் கய்யாத் [ரலி] அவர்களை அபூஜஹ்ல் அவர்களது பெண்ணுறுப்பில் ஈட்டிய

உயர்ந்தோனை நோக்கி..... புறப்படுவதற்கான அறிகுறிகள்

அல்லாஹ்வின் திருபெயரால்...... எல்லாப் புகழும் புகழ்ச்சியும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தாக! இந்த சம்பவம் ஒரு உருக்கமான சம்பவம் என்று கூறலாம்.......... நமக்கு நிறைய படிப்பினைகள் இருக்கின்றன. அழைப்புப் பணி நிறைவுற்று . இஸ்லாம் நிலைமைகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் போது இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் அதில் வாழ்பவர்களிடமிருந்தும் விடைபெறும் அறிகுறிகள் நபி [ஸல்] அவர்களின் உணர்வுகளில் தோன்றின. அவர்களது சொல் செயல்களிலும் வெளிப்பட்டன.

கல்வியின் சிறப்பு

கல்வியின் சிறப்பு 57.  'நான் நபி(ஸல்) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்துவதாகவும், ஸக்காத் வழங்குவதாகவும், ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நன்மையே நாடுவதாகவும் உறுதி மொழி எடுத்தேன்"ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3 58.  (முஆவியாவின் ஆட்சிக் காலத்தில் ஆளுனராக இருந்த) முகீரா இப்னு ஷுஅபா(ரலி) இறந்த நாளில் ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) எழுந்து மேடையில் நின்று இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, 'புதிய தலைவர் வரும் வரை இணையற்ற ஏக இறைவனுக்கு அஞ்சுவதையும், அடக்கத்தையும், அமைதியையும் கடமையாகக் கொள்ளுங்கள். இதோ இப்போது உங்களின் புதிய தலைவர் வந்து கொண்டிருக்கிறார்' என்றார். பின்னர் தொடர்ந்து, '(இறந்த) தலைவருக்காகப் பிழை பொறுக்கத் தேடுங்கள். ஏனெனில் அவர், பாவம் மன்னிக்கப்படுவதை விரும்பக்கூடியவராக இருந்தார்' என்றார். மேலும், 'நான் ஒரு முறை நபி(ஸல்) அவர்களிடம் சென்று 'இஸ்லாத்தைத் தழுவுவதாகத் தங்களிடம் உறுதி மொழி எடுக்க வந்திருக்கிறேன்' என்றேன். அப்போது அவர்கள், 'முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்' என்று எனக